
கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக சிலாங்கூர் மாநில அரசு ஏற்பாடு செய்த இலவச பரிசோதனைத் திட்டத்தில் 1 லட்சத்து 77,000 பேர் பலன் பெற்றுள்ளனர். கோவிட்-19 நோயாளிகளின் தங்கள் உடல் நிலை குறித்து அறிந்து கொள்வதற்கு ஏதுவாக 60,000 சுயப் பரிசோதனைக் கருவிகள் வழங்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர் குறிப்பிட்டார். சுகாதார அமைச்சு கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்வதற்காக மற்ற மாநிலங்கள் காத்திருந்த வேளையில் நாம் சொந்தமாக பரிசோதனையை மேற்கொண்டோம் என்று அவர் சொன்னார்.
