33.9 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

சட்டமன்ற உறுப்பினர் வயது வரம்பு 18: சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம்

மலேசிய பிரஜைகள் சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கான வயது வரம்பை 21 லிருந்து 18 ஆக குறைக்கும் 2021 ஆம் ஆண்டு சட்டம் சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சிலாங்கூர் மாநில அரசின் அமைப்புச் சட்ட மசோதா நேற்றுமாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவு கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து இந்த சட்டத்திருத்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த சட்டத்திருத்தத்திற்கு ஆதவளித்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகருக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்போர் மற்றும் தேந்தெடுக்கப்படுவோரின் வயது வரம்பு தொடர்பான சட்டப்பிரிவு 63ஐ திருத்தும் விவாதத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles