27.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

லிம் குவான் எங் 62 வயதை எட்டுகிறார்; ஏஎஸ்டி செய்தித் தளம் வாழ்த்துகிறது

முன்னாள் நிதி அமைச்சரும் பினாங்கு மாநில முன்னாள் முதல்வருமான லிம் குவான் எங், 2021 டிசம்பர் 8-ஆம் நாள் 62-ஆவது வயதை எட்டுகிறார். அவருக்கு ஏஎஸ்டி இணைய செய்தித் தளம் வாழ்த்து தெரிவிக்கிறது. 2018-இல் நடைபெற்ற 12-ஆவது பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மக்கள் கூட்டணி சார்பில் பினாங்கில் இவர் தலைமையில் ஆட்சி அமைந்தபோது, வரலாற்றில் முதல் முறையாக ஒரு தமிழருக்கு துணை முதல்வர் பதவி அளித்தார். பேராசிரியர் பி.இராமசாமி அந்த சிறப்புக்கு உரியவர். ஜனநாயக செயல் கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பு வகிக்கும் இவர், அரசியல் பாரம்பரியம் மிக்கவர். கோத்தா மலாக்கா தொகுதியில் தொகுதி சார்பில் தொடர்ந்து மூன்று நாடாளுமன்றத்திற்கு தேர்வான இவர், 1987 அக்டோபரில் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கைது செய்யப்பட்டு ஏறக்குறைய ஒராண்டு காலத்திற்கு தடுத்து வைக்கப்பட்டார். நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர்களுள் ஒருவரான லிம், கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு நெருக்கமானவர். இவ்வேளையில் லிம் குவான் எங்கிற்கு ஏஎஸ்டி-யின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles