34.6 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

மலேசியக் குடும்பம் நிகழ்ச்சிக்கு அனுமதி ஆனால் தைப்பூசத்திற்கு அனுமதி இல்லையா ? சிவக்குமார் மீண்டும் ஆவேசம்

அடுத்தாண்டு ஜனவரி 18 ஆம் நாள் கொண்டாடப்பட இருக்கும் தைப்பூசத்திற்கு அனுமதி இல்லை; ஆனால். மலேசியக் குடும்பம் 100 நாட்கள் அடைவு நிலை நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது ஏன் என்று பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவக்குமார் சாடியுள்ளார். இரு வேறு நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பது நியாயமில்லை. அண்மையக் காலமாக பல்வேறு தரப்பினரால் பலதரப்பட்டப் பொது நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக, தமக்கு ஒரு குறுஞ்செய்தியை தொடர்பு – பல்லூடக அமைச்சு அனுப்பியதாகவும் அதில், இம்மாதம் 9 – 12 ஆம் நாள் கோலாலம்பூர் மாநாட்டு மையம் KLCCஇல் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளுடன் மலேசியாக் குடும்பம் 100 நாட்கள் அடைவுநிலை விழாவுக்கு மக்கள் திரளாக வர அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சிவக்குமார் சுட்டிக் காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles