33.9 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

கட்டுக்கடங்காத கூட்டம் SOP விதிமுறைகள் மீறல்கள் மலேசிய குடும்ப கொண்டாட்ட விழாவை ரத்து செய்யுங்கள்!

நாட்டில் நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க Sop விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று அரசாங்கம் வழியுறுத்தி வரும் வேளையில் கேஎல்சிசி மாநாட்டு மையத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மலேசிய குடும்ப கொண்டாட்ட விழாவில் கட்டுக்கடங்காத கூட்டம் அலை மோதுவது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ தெரிவித்தார். எஸ்ஓபி விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. கூடல் இடைவெளியை பொதுமக்கள் பின்பற்றவில்லை. நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட எஸ்ஓபி விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது. ஆகவே இந்த கொண்டாட்டத்தை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே நேற்று தொடங்கி இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles