
ஒவ்வொரு ஆண்டும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தியாவில் 2021-ம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட முன்னணி 10 திரைப்படங்கள் பட்டியலை கூகுள் இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சூர்யா நடித்த ஜெய்பீம் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்தி படங்களான ஷேர்ஷா இரண்டாவது இடத்திலும், ராதே 3-ஆவது இடத்திலும், பெல் பாட்டம் 4ஆவது இடத்திலும், எட்டேர்னல்ஸ் 5ஆவது இடத்திலும், விஜய்யின் மாஸ்டர் 6ஆவது இடத்திலும் உள்ளன. போலீஸ் சித்ரவதையில் கொல்லப்பட்ட ராஜாக்கண்ணுவின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார். இதில் சூர்யா வழக்கறிஞராக நடித்து காவல் கைதி மரணத்திற்கு நீதி கிடைக்க போராடுகிறார். படத்தில் சர்ச்சை காட்சிகள் இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்த படம் அனைத்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
