29.6 C
Kuala Lumpur
Friday, July 31, 2026

Vetri

சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி விலக வேண்டும்: பிரதமர் மன்னிப்பு கோரவேண்டும்! மூத்த அரசியல்வாதி லிம் கிட் சியாங் கோரிக்கை

🔥 Views : 25
👁 Reading Now : 62

கேஎல்சிசி மாநாட்டு மண்டபத்தில் மலேசிய குடும்ப விழாவில் எஸ்ஓபி விதிமுறைகள் மீறப்பட்டது தொடர்பில் இந்த விழாவை ஏற்பாடு செய்த அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று மூத்த அரசியல்வாதி லிம் கிட் சியாங் ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார் மேலும் எஸ்ஓபி விதிமுறைகளை மீறியது தொடர்பில் அனைத்து மலேசியர்களிடம் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். நாட்டில் நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க Sop விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று அரசாங்கம் வழியுறுத்தி வரும் வேளையில் கேஎல்சிசி மாநாட்டு மையத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மலேசிய குடும்ப கொண்டாட்ட விழாவில் கூட்டம் அலை மோதியது அதிர்ச்சி அளிக்கிறது. நோய்த்தொற்று கட்டுப்படுத்துவதில் பிரதமர் போராடவில்லை என்றால் பின்னர் எப்படி அமைச்சரவை போராட போகிறது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விழாவில் எஸ்ஓபி விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது வேதனை அளிப்பதால் சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவியும் விலக வேண்டும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles