27.8 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

எஸ்ஒபியை மீறிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை?

அரசு நிகழ்ச்சியில் கோவிட்-19 எஸ்.ஒ.பி.யை மீறியது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதில் தீவிரம் காட்டப்படாதது குறித்து கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர், சார்ல்ஸ் சந்தியாகோ மிகவும் கடுமையாகச் சாடியுள்ளார். அரசின் 100 நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு கே.எல்.சி.சி.யில் நடைபெற்ற மலேசியக் குடும்ப தின விழாவில் கலந்து கொண்ட பெரும்பாலானோர் சமூக இடைவெளிப் பின்பற்றப்படாததை நேரடியாகக் கண்ட போதிலும் சுகாதார அமைச்சர், கைரி ஜமாலுடின் ஏன் உடனடியாக நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்று சார்ல்ஸ் கேள்வி எழுப்பினார். முன்னதாக இவ்விழாவின் ஏற்பாட்டாளருக்கு 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படும் என்று கைரி அறிவித்திருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles