29.9 C
Kuala Lumpur
Tuesday, June 9, 2026

Vetri

கெடா மாநிலத்தில் பல தமிழ்ப்பள்ளிகளின் நிலை கேள்வி குறி?

🔥 Views : 7
👁 Reading Now : 59

கெடா மாநிலத்தில் உள்ள 60 தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் அந்த பள்ளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது என்று ஜொகூர் மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வளர் சந்திர சேகரன் ஆறுமுகம் எச்சரித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு பெட்னோக் தோட்ட தமிழ்ப்பள்ளி மூடபடுவதில் இருந்து காப்பற்றபட வேண்டும் கோரிக்கையை வெளியிட்டேன். அதே நேரத்தில், பாலிங் மாவட்டத்தில் உள்ள மற்ற தோட்ட பள்ளிகளான கொத்தப்பா தோட்ட தமிழ்ப்பள்ளியில் 34 மாணவர்களுடனும் கோல கெட்டில் தோட்ட தமிழ்ப்பள்ளியில் 18 மாணவர்களும்,புக்கிட் செம்பிலான் தோட்ட தமிழ்ப்பள்ளியில் 20 மாணவர்களும், பிஞ்ஜோல் தமிழ்ப்பள்ளியில் 15 மாணவர்களும் மல்கோப் தோட்ட தமிழ்ப்பள்ளியில் 10 மாணவர்களும் மற்றும் குப்பாங் தமிழ்ப்பள்ளியில் 17 மாணவர்களுடன் என மொத்தம் 6 பள்ளிகள் குறைந்த எண்ணிக்கையில்யான மாணவர்களை கொண்டுள்ளதால் அப்பள்ளிகள் மூடும் அபாயத்தை எதிர்கொண்டு காத்திருக்கின்றன என திரு சந்திர சேகரன் வேதனையுடன் தெரிவித்தார். சுங்கை பட்டாணி வட்டாரத்தில் அமைந்துள்ள பட்டானி பாரா தோட்ட தமிழ்ப்பள்ளியில் 12 மாணவர்களும், சுங்காப் பாரா தமிழ்ப்பள்ளியில் 11 மாணவர்களும், சுங்கை பாத்து தமிழ்ப்பள்ளியில் 17 மாணவர்கள் என கல்வி பயில்வாதல் அந்த மூன்று பள்ளிக்கும் ஆபத்து காத்திருப்பதாக தகவல் தெரிவிக்கபட்டுள்ளது அதனை தொடர்த்து கூலிம் பண்டார் பாரு தொகுதியில் அமைத்துள்ள டபிலின் டிவிஷன் 7இல் உள்ள தமிழ்ப்பள்ளியில் 10 மாணவர்களும் டபிலின் டிவிஷன் 5 இல் 13 மாணவர்களும் டபிலின் சுங்கை டிங்கில் பள்ளியில் 13 மாணவர்கள் பயில்வதாக தெரிகிறது. இந்த மேற்குறிப்பிட்ட தமிழ்ப்பள்ளிகளின் நிலவரம் குறித்து தகவல் அறியும் போது,அந்த பள்ளிகள் எதிர்காலத்தில் இல்லமால் போகும் அபாயம் இருப்பதாக இங்கே புலப்படுகிறது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles