
அனைத்துலக போலீஸ் தேடுதல் பட்டியலில் சர்ச்சைக்குரிய ஜோ லோ இடம் பெற்றுள்ளார் என்று புக்கிட் அமான் இன்று அறிவித்தது. ஜோ லோவுடன் சேர்ந்து நிக்கி லாவ் என்பவரும் இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார். இதற்கான சிவப்பு நோட்டீஸ் புக்கிட் அமான் பெற்றுள்ளது என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி தெரிவித்தார். ஜோ லோ மற்றும் நிக்கி லாவ் ஆகியோருக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு நோட்டீஸ் அதிகாரத்துவ தரப்பின் பார்வைக்கு மட்டுமே உட்பட்டது என்று அவர் சொன்னார்.
