
காஜாங் செமினி கிறிஸ்துவ கல்லறைத் தோட்டத்திற்கு தண்ணீர் வசதி மற்றும் சிலாங்கூர் மாநில மானியத்தை பெற்றுத்தர தம்மால் இயன்றளவு முயற்சி செய்வதாக காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் ஆர். தியாகராஜா கூறினார். இந்த கல்லறை நிலத்தின் தண்ணீர் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வுக் காணப்படும் என உலு லாங்காட் பிகேஆர் தொகுதி தலைவர் இராஜன் முனுசாமி குறிப்பிட்டார். மேலும் இந்த விவகாரத்தை காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் ராமச்சந்திரன் அர்ஜுனன் மற்றும் செமினி இந்திய சமூகத் தலைவர் நடேசன் ஆகியோர் ஒன்றிணைந்து செயற்படுவதாக அவர்கள் கூறினர். இதனைத் தொடர்ந்து சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், வீ.கணபதி ராவ் அதிரடி நடவடிக்கையால் ஜாலான் புரோகா கிறிஸ்துவ கல்லறை 2.7 ஏக்கர் பரப்பளவு நிலத்தை மீட்டுக் கொடுக்கப்பட்டதை வெகுவாகப் பாராட்டி இச்சங்கத்தின் தோற்றுநர், தலைவர் மற்றும் இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான எஸ்.பி.தோமஸ் அவர்கள் சிறப்புரையில் அவரது சேவையை நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

இச்சங்கத்திற்கு தன்னலம் பாராமல் தொண்டு செய்த சங்கத்தின் நிர்வாக செயலவை உறுப்பினர்கள் சுமார் 38 பேருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. மக்கள் தொண்டினை தொடர்ந்து ஆற்றிட இதுபோன்ற ஊக்குவிப்பு பாராட்டு மிக அவசியமானது என நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழு தலைவரும் சங்கத்தின் நிறுவனருமான எஸ்.பி. தோமஸ் கூறினார்.
