
சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியாக விளங்கும் ஜிபிஎஸ் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தம் 82 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஜசெக மற்றும் பார்ட்டி சரவாக் பெர்சத்து தலா இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. நேற்று இரவு 11.00 மணி வரை ஜிபிஎஸ் மொத்தம் 74 இடங்களில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 28 இடங்களில் போட்டியிட்ட கெஅடிலான் மற்றும் 8 இடங்களில் போட்டியிட்ட அமானா கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
