
மோசமான திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சிலாங்கூர் அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இரு தினங்களாக பெய்து வரும் மழையால் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி இருக்கும் மக்களுக்கு உதவு அனைத்து அரசு துறைகளும் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். கிள்ளான், கோல லங்காட் மற்றும் சிப்பாங்கில் இதுவரை 33 துயர் துடைப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்குவது மற்றும் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுச் செல்வது போன்ற பணிகளில் அனைத்து அரசு துறைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
