34.6 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

தமிழ், சீனப்பள்ளி மாணவர்கள் தாய்மொழியை தங்கள் பள்ளிகளில் கற்க அனுமதிக்க வேண்டும்

கடந்த ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி கோத்தா பாரு உயர்நீதிமன்றத்தில், மலேசிய முஸ்லிம் ஆசிரியர் சங்கம் அதன் தலைவர் முகமட் அஜீஸீ ஹசன் மூலம் தேசிய மாதிரி தமிழ்ப்பள்ளிகள் மற்றும் தேசிய மாதிரி சீனப்பள்ளிகள் தங்களின் தாய் மொழி கல்வியை தாய்மொழியில் பயிலாமல் மாலாய்மொழிகளில் பயில வேண்டும் என வழக்கைத் தாக்கல் செய்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 20ஆம் தேதி 2022 இந்த வழக்கை முழு விசாரணை செய்ய கோத்தா பாரு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாய்மொழிப் பள்ளிகள் சட்டபூர்வமாக அமைக்கப்பட்ட ஒன்றாகும். ஒவ்வொருவருக்கும் தாய் மொழிக் கல்வியை, தாய் மொழியில் பயில உரிமையுண்டு என்று ஜொகூர் பெக்கோ சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ் இராமகிருஷ்ணன் தெரிவித்தார். மலேசியா சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை இல்லாத இது போன்ற பிரச்சனைகள் ஏன் வருகிறது என்று அவர் கேள்வியை எழுப்பினார். தமிழ் பள்ளிகளிலும் சரி, சீனப்பள்ளிகளிலும் சரி எத்தனையோ மாலாய்கார மாணவர்கள் பயில்கிறார்கள். நாம் எந்த மதம், இனம், மொழியின் அடையாளத்தயையும் அழிக்க முயலவில்லை, மாறாக ஆதரிக்கிறோம். ஆனால், அவர்களோ ஒரு இனத்தின் அடையாளமான மொழியையே அழிக்க முயற்சிகிறார்கள் என்று அவர் சாடினார். ஆகையால், மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். எந்த நிலையிலும் நம் உரிமைகளை இழந்துவிடக் கூடாது. நமக்கு கண்டிப்பாக ஆட்சி மாற்றம் தேவை என்பதை தெரிந்து செயல்படுவோம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles