
நாடு தழுவிய அளவில் பெய்து வரும் அடை மழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று தலைநகரில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. லெபோ அம்பாங்கில் பல அடி உயரத்திற்கு வெள்ளம் ஏறியதால் மக்கள் மற்றும் வணிகர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கினர். இந்நிலையில் புத்ரா உலக வாணிப மையத்தில் அருகில் உள்ள இடத்தில் வெள்ளம் சூழ்ந்தது. கோம்பாங் ஆற்றில் வெள்ளம் அபாய நிலையில் காட்சி அளித்தது. மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா உடனடியாக களத்தில் இறங்கி வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டார். கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் மாமன்னர் களத்தில் இறங்கிய காட்சிகளை இஸ்தானா நெகாரா தனது மூகநூலில் பதிவேற்றம் செய்துள்ளது.
