
கிள்ளான் மற்றும் ஷா ஆலமில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தினால் நான் எட்டு மணி நேரம் வரை சிக்கிக் கொண்டதாக கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் சாபு வேதனையோடு தெரிவித்தார். மக்கள் பிரதிநிதிகள் எங்கே என்று பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி கேட்கிறார்கள். இந்த வெள்ளத்தில் சிக்கி கொண்டவர்களில் நானும் ஒருவன் என்றார் அவர். மக்கள் வெள்ளத்தில் சிக்கி கொண்டபோது அவர்களை காப்பாற்ற மீனவர்கள் தங்களது மீன்பிடி படகுகள் வந்தனர். ஆனால் மக்களை உடனடியாக காப்பாற்ற வேண்டிய போலீஸ் மற்றும் ராணுவத்தின் படகுகள் ஏன் வரவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார். இது உயிர்கள் சம்பந்தப்பட்ட விவகாரம். சம்மந்தப்பட்ட அமைச்சு உடனடியாக நடவடிக்கையில் இறங்காது ஏன் என்று அவர் கேட்டார். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மீனவர்கள் உடனடியாக களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றினர் என்று அவர் சொன்னார்.



