
மிகவும் மோசமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கும் , பகுதிகளை சீரமைக்கவும் சிலாங்கூர் பங்கிட் இக்தியார் எனப்படும் சிலாங்கூர் எழுச்சி திட்ட சிறப்பு நிவாரண நிதியை மாநில அரசு அமைத்துள்ளது.. இதற்கு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கினார். வரலாறு காணாத அடைமழையால் சிலாங்கூர் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் நிவாரண நிதி தொடங்கப்பட்டுள்ளது.
