
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்ய சிலாங்கூர் பல்கலைக்கழகம் யுனிசெல் நேற்று 300 தன்னார்வலர்களைத் திரட்டியுள்ளது. யுனிசெல் தகவல் தொடர்பு இயக்குனர் ஹஸ்ரில் அபு ஹாசன் கூறுகையில், வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களின் வீடுகளை சுத்தப்படுத்தவும், நிதி உதவியை வழங்கவும் யுனிசெல் தலைவரும் துணைவேந்தருமான பேராசிரியர் டத்தோ ‘டாக்டர் முகமது ரெட்சுவான் ஓத்மான் தலைமையில் இந்த பணிகுழு அமைக்கப் பட்டது. சிலாங்கூர் மாநிலத்தில் பல இடங்களில் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்ய இந்த பணிக்குழு தீவிர கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார்.
