
ஜொகூர் மாநில முன்னாள் மந்திரி பெசார் ஒஸ்மான் சபியான் நேற்றிரவு 11.45 மணிக்கு காலமானார். 69 வயதான அவர் கடந்த இரண்டு மாதங்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் டமான்சாராவில் உள்ள தன் மகள் வீட்டில் தங்கியிருந்த வேளையில் நேற்றிரவு உயிர் பிரிந்தது என்று சகோதரர் ஒருவர் தெரிவித்தார். 2018 இல் நடைபெற்ற தேர்தலில் ஜொகூர் மாநிலத்தில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தபோது கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினரான இவர் ஜொகூர் மந்திரி பெசாராக பதவி ஏற்றார.
