
நாட்டை உலுக்கிய வெள்ளப் பேரிடர் பகாங் மாநிலத்தையும் விட்டு வைக்கவில்லை. பகாங்கில் இதுவரை வெள்ளத்திற்கு 11 பேர் பலியாகியுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பகாங் மெந்தகாப் பகுதி இன்னமும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பல அடி உயரத்திற்கு வெள்ளம் சூழ்ந்து காணப்படுவதால் மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி இருக்கிறார்கள். இதனிடையே பகாங் மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்ட காராக் தமிழ் பள்ளியும் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இந்த பள்ளியில் ஏறிய வெள்ளத்தினால் சேரும் சக்தியும் பெரும் அளவில் காட்சியளிக்கிறது.
