
சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தினால் மக்கள் மிகப்பெரிய பாதிப்பை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் சிலாங்கூர் எழுச்சி திட்டத்தை நேற்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தொடக்கி வைத்தார்.
இந்த திட்டத்திற்கு உதவும் வகையில் சிலாங்கூர் மாநில அரசு 10 கோடி வெள்ளியை ம ஒதுக்கீடு செய்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை கொண்ட குடும்பங்களுக்கு 10,000 வெள்ளி நிதியுதவி அளிக்கப்படும்.
சேதமடைந்த வீடுகள் மற்றும் பொருட்களை சரிசெய்வதற்காக குடும்பத் தலைவர்களுக்கு ஆயிரம் வெள்ளி வழங்க முடிவு செய்யப் பட்டுள்ளது என்று அவர் சொன்னார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மத்திய மற்றும் சிலாங்கூர் அரசாங்கங்களிடமிருந் தலா 2,000 வெள்ளி பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
