26.4 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சிலாங்கூர் மக்களுக்கு துங்கு மக்கோத்தா ஜொகூர் உதவிக்கரம்

சிலாங்கூர் மாநிலத்தில் கடுமையான வெள்ளத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவிகளை அனுப்பிய துங்கு மக்கோத்தா ஜோகூர் துங்கு இஸ்மாயில், சிலாங்கூர் மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறார். நேற்று உலு லங்காட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உதவி மற்றும் குழந்தைகளுக்கு தேவைகளான பால் மாவுகளை தெற்கு மண்டல தன்னால்வாளர்கள் மூலம் வழங்கப்பட்டது. உங்களுக்கு ஏதாவது தேவையென்றால் எனக்கு தெரியப்படுத்துங்கள். கடவுள் ஆசியில், நான் மீண்டும் உதவுவேன். நாளை மறுநாள் மேலும் உதவிகளுக்கு ஏற்பாடு செய்யலாம் என்று துங்கு இஸ்மாயில் தெரிவித்துள்ளார். , துங்கு மக்கோத்தா ஜோகூர் செய்த உதவிக்கு தனது அன்பை வெளிப்படுத்திய சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, உங்கள் உதவிக்கும் ஆதரவிற்கும் நன்றி. துங்குவின் அக்கறையை நான் மிகவும் பாராட்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles