
பேராக் சித்தியவான் பெக்கான் கர்ணி என்ற கிராமத்தில் 80 ஆண்டு காலமாக 4 தலைமுறைகளாக வாழ்ந்து வரும் கமலம் வயது 60 மற்றும் அவரது கணவர் பாஸ்கரன் வயது 65 ஆகியோர் குடும்ப வறுமையின் காரணமாக வாழ்க்கையில் பல துன்பத்திற்கு ஆளாகி வந்தனர். வீட்டுக்கூரைகள் முற்றிலும் சேதமுற்ற தால் அவ்வப்போது பெய்யும் மழை காலங்களில் இவர்களின் பொருட்கள் பெரும் சேதமுற்றது. இந்நிலையில் பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஙே கூட ஹாமின் இந்திய நல பிரிவு சிறப்பு அதிகாரி தினகரனை சந்தித்து கமலம் உதவி கேட்டுள்ளார். பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியோடு இப்போது கமலத்தின் வீடு சீரமைக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்திலேயே தனது வீட்டை புதுப்பித்து கொடுத்த புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அவரின் சிறப்பு அதிகாரி தினகரனுக்கும் கமலம் கண்ணீரோடு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
