
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகாங் காராக் மக்களுக்கு உதவி செய்யாமல் சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜ் காணாமல் போய்விட்டார் என்று பொய்ச் செய்திகளைn பரப்பிக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் கட்சியை மாண்புமிகு காமாட்சி துரைராஜ் தரப்பினரை இன்று கடுமையாக சாடியுள்ளார். நான் காராக்கில் தான் இருக்கிறேன். முதுகு எலும்பில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட போதிலும் சேரும் சக்தியில் நின்று கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறேன். என்னுடன் இணைந்து பல இயக்கங்களும் பக்கத்தான் ஹரப்பான் தொண்டர்களும் இரவு பகல் பாராது மக்களுக்கு உதவி வருகிறார்கள். வெள்ளத்தில் பரிதவித்த மக்களுக்கு உதவ வேண்டிய அரசு நிறுவனங்கள் மிகவும் தாமதமாக செயல்பட்டது ஆனால் நாங்கள் இங்குள்ள மக்களுக்கு உதவி கொண்டிருக்கிறோம். வெள்ளத்தில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உணவுகளும் துணிமணிகளும் வாங்கி கொடுத்து வருகிறோம். அகவே எனக்கு எதிராக முகநூலில் அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் எச்சரித்தார்.
