
நாட்டை உலுக்கிய மிக மோசமான வெள்ளத்தினால் இன்று காலை வரை 37 பேர் பலியாகியுள்ளனர் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி தெரிவித்தார். நேற்று புதன்கிழமை மட்டும் வெள்ளத்தில் சிக்கி உயிர் இழந்த ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இந்த மோசமான வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 10 பேரின் நிலை கேள்விக்குறியாக உள்ளது என்று அவர் சொன்னார். சிலாங்கூர் மாநிலத்தில் அதிகளவில் உயிர் பலி ஏற்பட்டுள்ளது. பகாங் மாநிலத்திலும் பலர் உயிர் இழந்தனர். இதனிடையே சிலாங்கூர், கோலாலம்பூர், பகாங், மலாக்கா, கிளாந்தான், நெகிரி செம்பிலான், பேராக் மாநிலங்களைச் சேர்ந்த 68,341 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
