
கடந்த வாரம் இறுதியில் நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தினால் பகாங் மாநிலமும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பகாங் மாநிலத்தில் காராக்கில் பல இடங்களில் ஏறிய வெள்ளத்தினால் மக்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது காராக் செத்தியா பள்ளி மற்றும் கம்போங் லிங்கோங்கில் தங்கியுள்ளனர். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜ் ஏற்பாட்டில் உணவுகள் வழங்கப்பட்ட வேளையில் அவர்கள் உடுத்தி கொள்ள துணிகள் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் மெத்தை உடபட இதர பொருட்களும் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
