
வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உதவுவதில் அரசாங்க அமைப்புகள் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்று மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் அரசாங்க அமைப்புகள் சிறந்த முறையில் செயல்பட வேண்டும். அதேசமயம் புதிய நோய்த்தொற்று உருவாகாமல் இருக்க வெள்ள நிவாரண மையங்களில் தங்கியிருப்பவர்கள் மத்தியில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மாமன்னர் வலியுறுத்தி உள்ளார்.
