
சிலாங்கூர் மாநிலத்தில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல நிறுவனங்கள் மற்றும் அரசியல். கட்சிகள் உதவி புரிந்து வருகின்றன. அந்த வகையில் கெஅடிலான் இளைஞர் பிரிவு தேசிய உதவித் தலைவர் தீபன் சுப்பிரமணியம் தலைமையில் சிலாங்கூர் மாநில கெஅடிலான் இளைஞர் பிரிவு களம் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறது. தாமான் ஸ்ரீ முடாவில் உள்ள மக்களுக்கும் கேரித்தீவு மக்களுக்கும் கெஅடிலான் இளைஞர் பிரிவு உதவி புரிந்துள்ளது. சிலாங்கூர் மாநில இளைஞர் பிரிவு உதவித் தலைவர் சத்தியா மற்றும் உலுலங்காட் கெஅடிலான் பொறுப்பாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறார்கள் என்று தீபன் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
