
நாட்டில் பெரும் துயரத்தை ஏற்படுத்திய வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ALF HKM Worldwide Empire நிதி திரட்டும் பணியில் இறங்கியுள்ளது என்று அதன் தலைமை இயக்குனர் டத்தோ முகமட் அலிப் ஹாக்கிங் தெரிவித்தார். வெள்ளத்தினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். வீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களும் சேதமடைந்துள்ளன. வீடுகளையும் பழுது பார்க்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். வெள்ளத்தினால் கிள்ளான் செந்தோசா மற்றும் தாமான் ஸ்ரீ மூடா மக்களும் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களின் கண்ணீரை துடைக்கும் வகையில் ALF HKM Worldwide Empire நிதியை திரட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உதவிகள் செய்ய விரும்பும் பொதுமக்கள் Hong Leong Bankk 1870 102 5654 என்ற கணக்கில் நிதியை சேர்க்கலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

