
ஜோகூர், பெங்கெராங் பகுதியில் ஒரு குடியிருப்புப் பகுதியை ஒட்டியுள்ள சாலையில் 105 மீட்டர் அளவுக்கு சாலை தடுப்புச் சுவர் இடிந்து விழுந்துள்ளது. அங்கு தொடர்ந்து பெய்துவரும் மழையினால் மண் இளகி இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாக கோத்தா திங்கி தலைமை போலீஸ் அதிகாரி ஹுசேன் ஸமோரா தெரிவித்தார். மலைப் பகுதியை ஒட்டி நடைபெற்ற இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக பொருட்சேதமோ உயிர் உடற்சேதமோ ஏற்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
