33.9 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

தொழிலாளர் ஏற்றுமதி: வங்காள தேசத்தைப் போல திரங்கானு உருமாறிவிட்டது -அமானா

பாஸ் கட்சி தலைமையிலான திரங்கானு மாநில அரசாங்கம், வேலை வாய்ப்பை உருவாக்குவதில் தோல்வி கண்டுள்ளதுடன் வங்காள தேசத்தைப் போல தொழிலாளர் ஏற்றுமதி மையமாக மாறிவிட்டது என்று அமானாக் கட்சி தெரிவித்துள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை தேடிக்கொள்ளும்படி மாநில இளைஞர்கள் கட்டாயப்படுத்தப் படுகின்றனர் என்று அமானா திரங்கானு மாநிலத் தலைவர் ராஜா கமாருள் பாஹ்ரின் ஷா குறிப்பிட்டுள்ளார். இளைஞர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான உதவியையோ வழிகாட்டுதலையோ வழங்குவதில் மாநில அரசு தவறிவிட்டது. அதனால்தான் நம்பிக்கை இழந்த இளைஞர்கள் கிள்ளான் பள்ளத்தாக்கை நோக்கி படையெடுப்பதாகவும் அவர்களை பேருந்து மூலம் சிலாங்கூருக்கு வழியனுப்பும் நிகழ்ச்சிகளும் நடைபெறுவதாக ராஜா கமாருள் விமர்சித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles