
பிரான்சில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது 46 உருமாற்றங்களை கொண்டுள்ளதாகவும், 12 பேர் இதுவரை பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் ஒமிக்ரோன் வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால், பல நாடுகளில் அடுத்த கொரோனா அலையின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ஒமிக்ரோன் தொற்று, டெல்டா வைரசை விட அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் உருமாறிய புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய ஆப்ரிக்க நாடான கேமிரோனில் இருந்து வந்த பயணிக்கு முதன் முறையாக இந்த உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என 12 பேருக்கு இந்த வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வும் தெரிவித்துள்ளனர்.
