
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எட்டு ஊராட்சி மன்றப் பகுதிகளிலிருந்து கடந்த மாதம் 20 ஆம் தேதி தொடங்கி இதுவரை 41,000 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. மிக அதிகமாக அதாவது 16,503 டன் குப்பைகள் ஷா ஆலம் மாநகர் மன்றத்திற்குட்பட்ட பகுதியிலிருந்து அகற்றப்பட்டதாக கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் கூறியது. எனினும் இப்பகுதியில் நேற்று வரை 80 விழுக்காட்டு துப்புரவுப் பணிகள் மட்டுமே முழுமை பெற்றுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
