31.4 C
Kuala Lumpur
Thursday, September 24, 2026

Vetri

முகுந்தன் தமிழ்ப் பள்ளிக்கு டாக்டர் குணராஜ் உதவிக்கரம் கோவிட்-19 பாதுகாப்பு உபரணங்களுடன் நிதி உதவி!

🔥 Views : 21
👁 Reading Now : 54

சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் டாக்டர் ஜி. குணராஜ், நெகிரி செம்பிலான் , போர்ட்டிக்சன் வட்டாரத்தை ஒட்டியுள்ள ‘கம்போங் இராமநாதபுரம்’ என்று அழைக்கப்படும் தாமான் புக்கிட் பிளாண்டோவில் உள்ள முகுந்தன் தமிழ்ப் பள்ளிக்கு முகக்கவசம், கொரோனா பரிசோதனைக் கருவி உள்ளிட்ட கோவிட்-19 பாதுகாப்பு உபகரணங்களையும் பள்ளி மேம்பாட்டு வளர்ச்சி நிதியையும் அளித்தார். இதன் தொடர்பில் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி செல்வி இராமசாமி, பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் சிவநேசன் முனியாண்டி இருவரும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான குணராஜிற்கு நன்றி தெரிவித்தனர்.

அமைதியான சுற்றுச்சூழலைக் கொண்டிருக்கும் இந்தப் பள்ளியில் கணினி அறையும் உள்ளது. ஆனால், கணினிதான் இல்லை. எனவே, இந்தப் பள்ளிக்கு குறிப்பாக நான்காம் ஆண்டு மாணவர்களின் பயனீட்டாள்லர்களுக்காக 20 கணினிகளும் ஒரு விவேக தொலைபேசியும் தேவை என்று செல்வி இராமசாமி தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles