
நாட்டின் மக்கள் தொகையில் 78.5 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 56 லட்சத்து 47 ஆயிரத்து 708 பேர் நேற்று வரை தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர். அதே சமயம், 23.9 விழுக்க்காட்டினர் அல்லது 78 லட்சத்து 9 ஆயிரத்து 058 பேருக்கு ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்களில் 2 கோடியே 28 லட்சத்து 81 ஆயிரத்து 770 பேர் பெரியவர்கள் என்றும் 27 லட்சத்து 5 ஆயிரத்து 938 பேர் இளையோர் என்றும் சுகாதார அமைச்சின் அகப்பக்கம் கூறியது
