
சிலாங்கூர் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 22,500 குடும்பங்களுக்கு தலா ஆயிரம் வெள்ளி நிதியுதவி வழங்கப் பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எழுச்சிமிகு சிலாங்கூர் மாநில திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ஆயிரம் வெள்ளி வழங்கப்படுகிறது. இதுவரை சிலாங்கூர் மாநில அரசு 1 கோடியே 35 லட்சம் வெள்ளியை செலவிட்டுள்ளது.
