29.4 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

Parti Kuasa Rakyat – Mira கட்சி இடையே அரசியல் ஒத்துழைப்பு

சந்திப்பு ஏழு புதிய கிளைகள் திறப்பு நாட்டின் 15 ஆவது பொதுத்தேர்தலை முன்னிட்டு Parti kuasa rakyat மற்றும் Mira கட்சி இடையே அரசியல் ஒத்துழைப்பு குறித்து நேற்று அம்பாங்கில் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. மீரா கட்சியின் தேசிய தலைவர் கே.பி. சாமி, உதவித் தலைவர்கள் டத்தோ குமார் அம்மன், என்.எஸ். மணியம், செயலாளர் கண்ணன் இராமசாமி, சிலாங்கூர் மாநில தலைவர் லெட்சுமணன், துணை தலைவர் டாக்டர் பாஸ்கரன், இளைஞர் பிரிவு தலைவர் தீபன் உட்பட அம்பாங் வட்டார மீரா உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இரு கட்சிகள் இடையே தேர்தல் ஒத்துழைப்பு குறித்து பேசப்பட்டதாக மீரா தலைவர் கே.பி. சாமி தெரிவித்தார். இதனிடையே அம்பாங் தொகுதி தலைவர் கே. மகேந்திரன் தலைமையில் அம்பாங்கில் ஏழு புதிய கிளைகள் அமைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles