33.5 C
Kuala Lumpur
Wednesday, August 5, 2026

Vetri

அசாம் பாக்கி விடுமுறையில் செல்ல வேண்டும்!

🔥 Views : 16
👁 Reading Now : 63

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி, தன்மீதான பங்கு பரிவர்த்தனை ஊழல் விசாரணை முடியும்வரை விடுப்பில் செல்ல வேண்டும் என்று நம்பிக்கைக் கூட்டணி தலைமைச் செயலகம் வலியுறுத்தி உள்ளது. அசாம் பாக்கி அவ்வாறு செய்யத் தவறினால், பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இதில் தலையிட்டு அனைத்து தரப்பினரின் குரலுக்கு செவிசாய்க்கும் விதமாக அசாம் பாக்கியை விலக்கி வைக்க வேண்டும் என்ரு பிகேஆரின் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன், அமானா கட்சியின் டத்தோ ஹட்டா ரம்லி, ஜசெக-வைச் சேர்ந்த அந்தோணி லோக், உப்கோ கட்சியின் நெல்சன் அங்காங் ஆகியோரைக்கொண்ட தலைமைச் செயலக அணி கேட்டுக் கொண்டுள்ளது. இஸ்மாயில் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ அசாம் பாக்கியை தற்காக்கவும் பாதுகாக்கவும் கூடாது என்றும் பிகேஆர் தலைமை செயலக அணி வலியுறுத்தி உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles