28.6 C
Kuala Lumpur
Thursday, July 30, 2026

Vetri

பெருந்தொற்று கட்டத்தில் இருந்து குருந்தொற்று நிலை அறிவிப்பு: -அரசாங்கம் அவசரப்படாமல் கவனமாக பரிசீலிக்கிறது

🔥 Views : 14
👁 Reading Now : 58

தளராத SOP நடைமுறையைப் பின்பற்றி, கொரோனாவுடன் வாழப் பழகும் நிலையை எட்டும்பொருட்டு, நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்று கட்டத்திலிருந்து குறுந்தொற்று கட்டத்திற்கு மாற்றும் விஷயத்தில் அரசாங்கம் மிகுந்த கவனப் போக்கை கடைபிடிக்கும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை தற்போதைக்கு அதிக உயர்வைக் காணவில்லை. சுவீடன், டென்மார்க் போன்ற நாடுகளை அணுக்கமாக கண்காணித்து வருகிறோம். கோவிட்-19 பெருந்தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக அவர்கள் முன்னதாகவே பிரகடனப்படுத்தி விட்டனர். ஆகவே, இவ்விவகாரத்தில் தானும் சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லாவும் மிகுந்த கவனப் போக்கை கடைபிடிக்கிறோம். இந்த அணுகுமுறை குறித்து விமர்சனம் எழுந்தாலும் அதை ஒதுக்கிவைத்துவிட்டு, பிறகு வருத்தப்படுவதை விட இப்போது முதலே பாதுகாப்பாக இருப்பது நல்லது என்ற எண்ணத்துடன் செயல்படுவதாக கைரி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles