30.5 C
Kuala Lumpur
Friday, September 25, 2026

Vetri

அணி தாவும் தவளைப் போக்கு: அனைவரும் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்கவில்லையாம்

🔥 Views : 25
👁 Reading Now : 39

கட்சித் தாவலுக்கு எதிரான சட்டம் குறித்து ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனித்தனி கருத்தைக் கொண்டிருக்கின்றன என்று சட்ட அமைச்சர் Wan Junaidi Tuanku Jafar தெரிவித்தார். தேர்ந்து எடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கட்சித் தாவுவது குறித்து ஒரு கட்சிக்கும் மற்றொரு கட்சிக்கும்..; அதைப்போல ஒரு கூட்டணிக்கும் இன்னொரு கூட்டணிக்கும் இடையே வேறுபட்ட-முரண்பட்ட கருத்து நிலவுகிறது. இதில், சுயேச்சை உறுப்பினர்களின் நிலை குறித்து எந்தத் தெளிவும் இல்லை என்றெல்லாம் கட்சித் தாவல் சட்டம் குறித்து இவர் தெரிவித்துள்ளார். நாட்டின் சட்ட அமைச்சரான இவர், தான் என்னக் கருத்தைக் கொண்டிருக்கிறார் என்பதைப் பற்றி குறிப்பிடாமல், மற்றவர்களுக்குப் பின்னால் ஒதுங்கிக் கொள்ளப் பார்ப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles