28.5 C
Kuala Lumpur
Thursday, April 23, 2026

Vetri

நியாமான தீர்வு கிடைக்கும் வரையில் போராடுவோம்!

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக,தென் செபராங் பிறை நிபோங் திபால் ஜாலான் பாரு மற்றும் ஜாலான் பெசார் பகுதியில் வசித்து குடும்பங்களும்,வியாபாரிகளும் அங்கிருந்து வெளியேற வேண்டுமென நில உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இவர்கள் இருந்து வருகின்றனர்,சம்பந்தப்பட்ட நில உரிமையாளர் இடத்தை காலி செய்ய இவர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
இருப்பினும் வெளியேறும் இவர்களுக்கு நியாமான இழப்பீடு மற்றும் கால அவகாசம் வழங்க வேண்டுமென இவர்கள் போராடி வருகின்றனர்.
தற்போது இந்த இடத்தில் மூன்று இந்தியக் குடும்பங்களும்,இரண்டு இந்தியர் உணவுக்கடைகள்,ஒரு வாகனம் ஓட்டும் பயிற்சிப் பள்ளி ஆகியவை பாதிக்கப்படுவதாக வாகனப் பயிற்சிப் பள்ளியின் உரிமையாளர் ஜெகநாதன் என்ற மணிமாறன் ( வயது 59 ) தெரிவித்தார்.
எது எப்படி இருப்பினும் சரியான தீர்வு கிடைக்கும் வரையில் காத்திருப்போம் எனவும் இவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles