
டான்ஸ்ரீ முகதீர் யாசின், தன் பிரதமர் பதவியை தற்காத்துக் கொள்ள அமைச்சர் பதவிகளையும் ஜிஎல்சி பதவிகளையும் லஞ்சமாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் குரல்பதிவு சமூக வலைதளங்களில் பரவியது; Prasarana நிறுவனத்தில் முறைகேடு நடந்ததாக அதன் தலைவராக இருந்த தாஜுடின் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த இருவர் மீதும் மேல் விசாரணை இல்லையென்று ஊழல் தடுப்பு ஆணையம் முடிவு எடுத்ததற்கான காரணத்தை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது. இதனால், அஸாம் பாக்கி தலைமையிலான ஊழல் தடுப்பு ஆணையம் பாரபட்சமாகவும் ஆள் பார்த்தும் செயல்படுகிறதா என்ற கேள்வியும் தோற்றமும் ஏற்பட்டுள்ளது.



