
ஜோகூர் மாநிலத் தேர்தலின் பிரச்சார நோக்கத்திற்காக பொது இடங்களில் பெரிய அளவிலான கூட்டங்களை நடத்த ஒருபோதும் அனுமதிக்கப்படாது; சொற்பொழிவு உள்ளிட்ட அனைத்து பிரச்சாரம் நடவடிக்கையும், தேர்தல் நடவடிக்கை அறை அல்லது கட்சி அலுவலகத்தில் மட்டும் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஜோகூர் மாநில தேர்தலில் கூட்டம், சொற்பொழிவு மற்றும் பிரச்சாரத்தை மேற்கொள்ள இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் முன்னர் தெரிவித்திருந்தது. எனினும், திருத்தம் செய்யப்பட்ட புதிய SOP-முறைப்படி, பிரச்சார நேரத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.



