
மக்கள் நீதிக் கட்சியில் ஜனநாயக நடைமுறையை நிலைநிறுத்த விரும்புவதால், கூடிய விரைவில் கட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தி உள்ளார். நடைபெற விருக்கும் கட்சித் தேர்தலில் பிகேஆர் உறுப்பினர்களை இணையத்தின் மூலம் பதிவு செய்து வாக்களிக்க அனுமதிக்கும் ‘Adil’ மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியபோது அவர் இவ்வாறு கூறினார். மக்கள் நீதிக் கட்சியின் கொள்கை மற்றும் சட்டதிட்டத்தின் அடிப்படையில் தேர்தலை ஒத்திவைக்குமாறு நண்பர்கள் கேட்டுக் கொண்டும் தான் உடன்படவில்லை. 2018 கட்சித் தேர்தலில் ஐந்தாண்டு தவணைக்கு நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டோம். சங்கப்பதிவக உத்தரவு, அவசரகால நிலை அல்லது பொதுத் தேர்தல் சமயங்களில் கட்சித் தேர்தலை ஒத்திவைக்க பிகேஆர் அமைப்புச் சட்டம் இடமளிக்கிறது எனவும் அன்வார் கூறினார்.



