26.4 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

பினாங்கு மாநில அரசுக்கு சுங்கை டுவா முனீஸ்வரர் ஆலயத்தின் நன்றி

🔥 Views : 6
👁 Reading Now : 54

மேம்பாட்டு திட்டங்களுக்காக மத்திய அரசாங்கத்தால் எடுத்துக் கொள்ளப்பட்ட குளுகோர் சுங்கை டுவா,தேவா ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்துக்கு மாற்று இடத்தை வழங்கியிருக்கும் பினாங்கு மாநில நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்துக்கு ஆலயத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
நிலம் எடுத்துக் கொள்ளப்பட்ட போது ,ஆலயத்தின் நிலைமை என்ன ஆகுமோ என்ற நிலையில் இருந்த போது,பத்து உபான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் களமிறங்கி செயல்பட்டார்.


.தற்போது இந்த ஆலயத்திற்கு 6,000 சதுர அடி நிலமும்,ஆலயத்தை புதிய இடத்தில் நிர்மாணிப்பதற்கு போலீஸ் துறையிடமிருந்து 45 ஆயிரம் வெள்ளியையும் பெற்று தந்து அவர் உதவியிருப்பது,சமயத்தின் மீதும் ஆலயங்களின் மீதும் அவர் கொண்டுள்ள அக்கறையை காட்டியுள்ளது என தேவா ஸ்ரீ முனீஸ்வரர் பக்தர்கள் மன்றத்தின் தலைவி விஜயலெட்சுமி அண்ணாமலை கூறினார்.
மேலும் இந்த ஆலயத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து உதவிகள் வழங்கி வரும் பினாங்கு மாநில முதல்வர் சோவ் கோன் யோவ்,துணை முதல்வரும்,இந்து அறப்பணி வாரியத்தின் தலைவருமான பேராசிரியர் பி.இராமசாமி,அதன் நிர்வாக இயக்குனர் டத்தோ எம்.இராமச்சந்திரன் மற்றும் அனைத்து நிலைகளிலும் உதவிய அனைவருக்கும் ஆலய நிர்வாகத்தினர் மீண்டும் நன்றியினை புலப்படுத்திக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles