33.9 C
Kuala Lumpur
Tuesday, August 4, 2026

Vetri

பருவநிலை மாற்றம்:
மத்திய அரசுடன் ஒத்துழைக்கச் சிலாங்கூர் அரசு தயார்

🔥 Views : 27
👁 Reading Now : 52

பருவநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்வதற்கு ஏதுவாக மத்திய அரசுடனும் இதர மாநிலங்களுடனும் ஒத்துழைக்க சிலாங்கூர் தயாராக உள்ளது என்று சுற்றுச் சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

எனினும், தற்போதைக்கு இப்பிரச்னையைக் கையாள்வதற்குச் சிலாங்கூர் மாநிலம் மட்டுமே சிறப்பு குழுவைக் கொண்டிருக்கிறது. பருவநிலை மாற்றம் தொடர்பில் ஆட்சிக்குழு நிலையில் நிரந்தரச் செயல்குழுவைக் கொண்டுள்ள ஒரே மாநிலமாகச் சிலாங்கூர் விளங்குகிறது.
மற்ற மாநிலங்களில் அத்தகைய குழுக்கள் இல்லை.சுற்றுச்சூழல் மற்றும் நீர் வள அமைச்சிலும் பருவநிலை மாற்றம் என்ற பெயர் பிரத்தியேகமாக இடம் பெறவில்லை என்று ஹீ லோய் சியான் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles