
ஜோகூர் தேர்தலின்போது மக்களிடம் வாக்குகளைப் பெறுவதற்காக ஜோகூர் தேசிய முன்னணித் தலைவரும் இடைக்கால மந்திரி பெசாராக செயல்பட்டவருமான டத்தோஸ்ரீ Hasni Mohammad-தான் தேசிய முன்னணியின் மந்திரி பெசார் வேட்பாளர் என்று அம்னோவும் தேசிய முன்னணியும் பிரச்சாரம் செய்தன.
வாக்காளர்களின் அபரிமிதமான ஆதரவுடன் வென்றபின், இப்போது மந்திரி பெசாரை மாற்றியுள்ள தேசிய முன்னணி, குறிப்பாக அம்னோ இது குறித்து ஜோகூர் வாக்காளர்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
அம்னோ, அப்படியே கடந்துபோக நினைத்தால் அது ஜனநாயக விரோதம். மக்களிடம் ஆதரவைப் பெறுவதற்காக ஒன்றைச் சொல்லிவிட்டு, வென்றபின் ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்களிடம் எந்தக் காரணமோ அல்லது விளக்கமோ சொல்லலாமல் மந்திரி பெசாரை மாற்றும் அம்னோ-வின் போக்கு, அதன் பாரம்பரியத்திற்கு இழுக்கு; ஜனநாயகத்திற்கும் விரோதம்.
