25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டுமாம்:
15-ஆவது பொதுத் தேர்தலை வலியுறுத்தும் அம்னோ

🔥 Views : 7
👁 Reading Now : 27

இதுதான் சரியான சந்தர்ப்பம்; பலவீனப்பட்டிருக்கும் எதிரிகளை சொல்லி அடித்து வெற்றிபெறுவதற்கு ஏதுவாக 15-ஆவது பொதுத் தேர்தலை இந்த ஆண்டே நடத்த வேண்டும்; அடுத்த ஆண்டு என்பது கதைக்கு உதவாது என்று அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.

மக்களின் மனநிலை மாறியுள்ளது என்பதை சபா, மலாக்கா, ஜோகூர் தேர்தல்களில் இடம்பெற்ற வாக்களிப்பு முறை தெளிவாக சுட்டிக் காட்டுவதால், காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள அம்னோ தயங்கக்கூடாது.

பெரிக்காத்தான், பக்கத்தான் கூட்டணிகள் பலவீனப்பட்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தை கச்சிதமாக பயன்படுத்தாவிட்டால், காற்று திசைமாறவும் கூடும் என்று தற்பொழுது நடைபெறும் அம்னோ பொதுப் பேரவை தொடர்பில் மகளிர், இளைஞர், புத்ரி பேராளர்களின் கூட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் முகமட் ஹசான் பேசியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles