
பொதுத் தேர்தல் குறித்து முடிவெடுப்பது, மாமன்னரின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என்பதால், பேரரசரின் அதிகாரத்தை யாரும் கையில் எடுத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்லார்.
15-வது பொதுத் தேர்தல் நடத்தப்படும் சாத்தியம் குறித்து வினவியபோது, அவர் இவ்வாறு பதிலளித்தார்.
பொதுத் தேர்தலுக்கான தேதி குறித்து இதுவரை அம்னோ உச்சமன்றத்தில் விசாதிக்கப்படவில்லை. அத்துடன் நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் பேரரசரிடம் அனுமதி பெற வேண்டுமெனவும் அவர் கூறினார்.
