
சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோனி லொக், DAP கட்சியின் புதிய தலைமைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இவ்வேளையில், முன்னாள் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் , கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். கோபிந் சிங் டியோ துணைத் தலைவராக நியமனம் பெற்றார்.
முன்னதாக மத்திய செயற்குழுவிற்கு லிம் குவான் எங் தேர்வு பெற்ற வேளை, அவரது சகோதரி லிம் ஹுய் யிங்கும் புதிதாக அச்செயற்குழுவில் இடம்பெற்றார்.
அந்த புதிய செயற்குழுவில் எம். குலசேகரனும், கஸ்தூரி பட்டுவும் இடம்பெற்றுள்ளனர். எம்.குலசேகரன் உதவித் தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.
மத்திய செயற்குழுவிற்கு போட்டியிட்ட வி. சிவக்குமார், வீ. கணபதிராவ் இருவரும் வெற்றி பெறத் தவறிய வேளை , வி. சிவக்குமர் துணை தலைமைச் செயலாளர்களில் ஒருவராகவும், தேசிய விளம்பர துணைச் செயலாளராக வி. கணபதிராவும் நியமிக்கப்பட்டனர்.
